fbpx
Others

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல் !

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்:மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில் இருந்தார். ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார். கர்நாடக மாநிலம் ஷிமோகா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதியாக இருந்தார். ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்கிறார்.கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரான ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்பதால் எடியூரப்பா மகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆலோசனை நடத்துவதற்காக ஈஸ்வரப்பாவை டெல்லிக்கு அழைத்த நிலையில் அவர் உடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார். பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஈஸ்வரப்பா கருத்துதெரிவித்திருக்கிறார். எடியூரப்பாமகனைஎதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்: பாஜக மாநில தலைவர் ராகவேந்திரா போட்டியிடும் ஷிமோகா தொகுதியிலேயே கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டாலும் மோடி படத்துடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும் ஏற்கனவே துணை முதலமைச்சராக இருந்தவருமான ஈஸ்வரப்பா போட்டியால் எடியூரப்பா மகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close