fbpx
OthersRE

நல்லதை செய்யும் மனப்பான்மை ; கியூபாவில் பரந்த உள்ளம்!

நாம நல்லா வாழ்ந்து காண்பிப்பதுதான் நாம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்குற மிகப்பெரிய ஒரு தண்டனை.கியூபா என்ற நாடு வாழவே கூடாதுன்னு நிறைய ஆதிக்கசக்தி நிறைந்த நாடுகள் நினைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனா இப்போ கியூபா-வின் பெயர் நிறையபேருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

கியூபா தற்போது செய்த வேலையின் காரணமாக பிரிட்டன் நாடு கியூபாவை மிகப்பெரிய அளவில் மிச்சிட்டு இருக்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு செய்த ஒரு மிகப்பெரிய உதவி அதை நாங்கள் மறக்கவே மாட்டோம் என சொல்லிக்கொண்டு உள்ளார்கள். ஆனால் பிரிட்டன் சொல்வதை மற்ற நாடுகள் எந்த அளவில் நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளும் என்பது நமக்கு தெரியவில்லை.

இப்போ கியூபா என்னா செய்தது என்றால் அமெரிக்காவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தீவு அந்த தீவிலிருந்து ஒரு கப்பல் MS Bramar என்ற கப்பல் தான் கிட்டத்தட்ட 1500 சுற்றுலா பயணிகளையும் 150 பணியாட்கள் இவர்கள் எல்லாரையும் சேர்த்து அந்த கப்பல் கிளம்புது எங்கேருந்துனா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் போர்டோ ரிக்கா என்ற தீவிலிருந்து பிரிட்டன் நோக்கி இந்த கப்பல் செல்கிறது.

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த கப்பலில் இருக்கும் ஒரு நபருக்கு கொரோன வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்ததா இந்த வைரஸ் 22 நபர்களுக்கு பயணிகளுக்கு பரவுது, அப்படியே பரவி இந்த வைரஸ் பணியாட்களுக்கும் பரவுகிறது.இவ்வாறு 45 நபர்கள் இந்த கொரோனா வைரசால் பாதிப்படைகிறார்கள்.

அந்த கப்பலில் 45 நபர்களுக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டதால் அந்த கப்பலில் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. அதனால் அந்த கப்பலில் இருந்த மாலுமி நிறைய நாடுகளிடம் உதவி கேட்கிறார்கள். எப்படியென்றால் நாங்கள் இந்த கப்பலில் மாட்டிக்கொண்டுள்ளோம் இதில் இருக்கும் பயணிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் குறிப்பா பிரிட்டனுக்கு அனுப்பவேண்டும் அதனால் எங்களுக்கு உதவி செய்ய முடியுமா என நிறைய நாடுகளிடம் கேட்கப்பட்டது.எந்த நாடும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

அப்போது அந்த கப்பல் எங்கு நிற்கிறது என்றால் அமெரிக்காவின் கடல் எல்லையின் பக்கம் நிற்கிறது. அதனால் அமெரிக்காவின் கடல் எல்லையின் பக்கம் இருக்கும் மாகாணங்களிடம் அந்த கப்பலை நிறுத்த அனுமதி கேட்கப்பட்ட போது அமெரிக்காவும் அந்த மாகாணங்கலும் மறுத்துவிட்டன சரி அப்படியே நாம போர்டோ ரிக்காவுக்கே போய்விடலாமா எனஅவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்களும் நீங்கள் இங்கே வரக்கூடாது வந்தாலும் தரையிறங்க விடமாட்டோம் என கூறினார்கள். இப்போ அந்த கப்பலில் பிரிட்டன் போகின்ற அளவுக்கு எரிபொருளும் கிடையாது.

இவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கும் போது தான் கியூபா சொல்கிறது நீ எங்கள் நாட்டுக்கு வா நாங்கள் உங்களுக்கு முதலுதவி கொடுத்து பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம் கிடைத்தது.1500 பயணிகளுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று கூறப்பட்டதும் அந்த கப்பல் கியூபா-விற்க்கு கொண்டுவரப்படுகிறது.

கியூபாவில் அந்த கப்பலில் இருந்த அத்தனை நபர்களுக்கும் முதலுதவி கொடுக்கப்படுகின்றது. அப்படி கொடுக்கப்பட்டதும் அந்த மனிதர்களை அப்படியே தனி விமானம் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். பிரிட்டன் அரசாங்கம் கியூபாவிற்கு நன்றி சொல்கிறது.

இது நடந்ததுக்கு பின்னர் கியூபா நாட்டை பற்றி பலரும் பேசுகிறார்கள். இவ்வாறு நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கும் இந்தமாதிரியான எதிர்வினையைதான் நாம் செய்து காட்டி அவர்களின் முன்னேயே வாழ்ந்து காட்டவும் வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close