fbpx
Others

இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல், விமானங்கள் அனுப்பி வைப்பு

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கடற்படை கப்பலும், 2 விமானப்படை விமானங்களும் விரைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணைராணுவ தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இருதரப்பினரிடையேயான கடும் மோதலில் ஒரு இந்தியர் உள்பட அப்பாவி பொதுமக்கள் 300க்கும்மேற்பட்டோர்பலியாகிவிட்டனர் .ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும், சூடானில் உள்ள வௌிநாட்டினர் வெளியேற ஏதுவாகவும் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி நைல் நதியின் குறுக்கே அமைந்துள்ள ஓம்டுர்மானில் நேற்று காலை கடும் சண்டை மூண்டது. சூடானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களையம், தூதரக அதிகாரிகளையும் மீட்க உலக நாடுகள் முயன்று வருகின்றன. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமேதா கப்பல் சூடான் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீட்பு பிரான்ஸ் தங்கள் நட்பு நாடுகளின் உதவியுடன் சூடானில் உள்ள தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நெதர்லாந்து இரண்டு விமானப்படை விமானங்களையும், ஓரு ஏர்பஸ் விமானத்தையும் ஜோர்டனுக்கு அனுப்பியுள்ளது. இதேபோல் “கார்டூம் நகரில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளை என் உத்தரவின் பேரில் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கலவர நேரத்தில் சூடான் மக்களுடன் இணைந்து பணியாற்றி தங்கள் கடமையை நிறைவேற்றிய தூதரக அதிகாரிகளை நினைத்து பெருமைப்படுகிறேன். அதேபோல் அவர்களை பத்திரமாக மீட்டு வந்த ராணுவத்தினருக்கும் நன்றிகள்” அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close