fbpx
Others

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன….?

தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.                  பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று ராணிப்பேட்டையில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது போல் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென பாஜ கூறுகிறது. கள்ளக்குறிச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், பாஜவை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. முதலில் நோட்டாவை ஜெயிக்கட்டும் என்று கூறியுள்ளார். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்வார்கள். அதிமுக நிலையும் அதுதான். இரண்டும் ஒன்று தான். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், நேற்று கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ப்வேறு தரப்பினரை சந்தித்து கோரிக்கைகளை மனுக்களை பெற்றனர். பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘கூட்டணிக்கு அதிமுக இலவு காத்த கிளியாக இல்லை. பாஜ தான் இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டிக்கிறது. பாஜ முதலில் நோட்டாவை வெல்லட்டும். பிறகு அவர்களை பற்றி பேசுவோம். பாஜ என்பது ஒரு மதவாத சக்தி.

அந்த மதவாத சக்தியோடு இப்போது மட்டும் இல்லை எப்போதுமே கூட்டணி இல்லை என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறும் ஓபிஎஸ்க்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். ஓபிஎஸ் ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார்’ என்றார். பின்னர், சேலம் சென்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close