fbpx
Others

கொரோனா பரவல் ; நியூயார்க்கில் உயிரிழந்தவர்களை மொத்தமாக புதைக்கும் அவலம் !!

உலகம் முழுவது இன்று கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. தற்போதுவரை இந்த தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

இந்த வைரஸானது ஒரு மனிதன் உடம்பில் இருந்து மற்ற மனிதருக்கு பரவும் தன்மை கொண்டுள்ளதால் இதன் காரணமாக பல உயிர்கள் மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான உயிர்கள் இந்த உயிர்கொல்லி வைரசால் செத்து மடிந்துள்ளன. உலகிலேயே நியூயார்க் நகரில்தான் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மற்ற நாடுகளை விட இங்கு வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை விடவும் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவ்வாறு அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதால் அவர்களை மொத்தமாக போட்டு புதைக்கும் அவள நிலை ஏற்பட்டுள்ளது.

150 வருடத்திற்கும் முன்பிலிருந்தே அதிகாரிகள் , உறவினர்கள் யாரும் அற்றவர்கள் மற்றும் இறுதி சடங்கு செய்ய வசதி இல்லாதவர்களின் சடலங்களை புதைக்க பயன்படுத்தும் ஹார்ட் தீவிலிருந்து ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம். இங்கிருக்கும் பல சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள்.

தற்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுவதால் வாரத்தின் முதல் நாளில் இருந்து ஐந்தாம் நாள் வரையும் இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் தண்டனை நிறைவேற்றும் துறை கூறியுள்ளது.

பொதுவாக ரிக்கர்ஸ் தீவின் முக்கிய சிறையில் இருக்கும் குற்றவாளிகளே இந்த வேலையை செய்வார்கள். ஆனால் தற்போது வேலை பளு அதிகமாக உள்ளதால் கான்ட்ராக்டர்கழும் இதை செய்கிறார்கள்.

நியூயார்க்நகர மேயர் பின் டி பிளேசியோ இந்த கொரோனா தொற்று பிரச்சனை முடியும் வரை தற்காலிகமாக சடலங்களை புதைப்பது அவசியம் என்றார். அதற்கு காலம்காலமாக இருக்கும் ஒரே இடம் ஹார்ட் தீவேயாகும் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close