fbpx
Others

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து.

திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அறவழியில் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததை கண்டித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், ஒருங்கிணைப்பாளர் அருள் அவர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் திரும்பப் பெறப்படாமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக ரத்து செய்ய கோரியும், மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் 24 மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கத்தின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   1) தமிழ்நாடு அரசு மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராடிய விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மீது பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும், ஒருங்கிணைப்பாளர் அருள் அவர்கள் மீது உள்ள குண்டர் சட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.  2) அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்களையும், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், சட்ட விழிப்புணர்வு அணியின் மாநில செயலாளர் அவிநாசி சதீஷ், வேளாண் தொழில் முனைவோர் மன்றத்தின் மாநில செயலாளர் ஐந்துணை வேலுச்சாமி, மாநகரச் செயலாளர் ரமேஷ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் அத்திக்கடவு நவீன், திருப்பூர் மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கௌரீஸ்வரன், சுகுமார், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சுரேந்தர், பல்லடம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர் பொன்னாபுரம் ஈஸ்வரன், காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் வரதராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லோக சிகாமணி, திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் தாமரைச்செல்வி, குடிமங்கலம் ஒன்றிய தென்னை அணி செயலாளர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பூளவாடி செந்தில், இனாம் நில விவசாயிகள், வீடு-மனை உரிமையாளர்கள், குத்தகையாளர்கள் இயக்கத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் எல்.ஐ.சி.செல்வராஜ், குண்டடம் ஒன்றிய பொருளாளர் பெல்லம்பட்டி பச்சையப்பன், மகளிரணி நிர்வாகிகள் நீலாவதி, கிருஷ்ணவேணி, ஹேமலதா வாசு, செல்வி, சுமதி தங்கவேல், கலைச்செல்வி, காட்டூர் புதூர் கஜேந்திரன், ரங்கநாதன், மூர்த்தி, சந்தவ நாயக்கன்பாளையம் அப்பு என்கின்ற துரைசாமி, அத்திகடவு சம்பத், தண்டபாணி, இளங்கோ,   நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் KAK கிருஷ்ணசாமி, தமிழ் தேசிய கூட்டியக்கம் புலவர் திருக்குமரன், நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திருஞானசம்பந்தம், பி.ஏ.பி.விவசாயிகள் சங்கம் விஜயசேகர்,   கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் குண்டடம் ராசு, தலைமை நிலைய செயலாளர் K.M.ராமசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், மாநகர் மாவட்டத் தலைவர் கோகுல் ரவி, பல்லடம் ஒன்றிய தலைவர் வேலுமணி, அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுச்சாமி, தெக்கலூர் ஆறுமுகச்சாமி, பல்லடம் நகரத் தலைவர் மைனர் தங்கவேல் மற்றும் விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close