HealthTamil News
ரவை பாயாசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ;
1.ரவை 1 கப்
2.பால் 1 லிட்டர்
3.ஜவ்வரிசி சிறிது
4.முந்திரி
5.ஏலக்காய்
6.சர்க்கரை 2 கப்
7.நெய்
செய்முறை ;
முதலில் கடாயில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரியையும் ,ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் 1லிட்டர் பாலில் சர்க்கரையை போட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நீரில் ஜவ்வரிசியை போட்டு, .ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் அதை ஆறவைக்கவும்.
இரண்டும் நன்றாக ஆறியதும் ஜவ்வரிசியை பாலில் கலந்து அதில் வறுத்த ரவையை சேர்க்க வேண்டும் . ஏன் அதை நாம் ஆறவைத்து போடுகிறோம் என்றால் ரவை சீக்கிரம் வெந்துவிடும் எனவே ஆறவைத்து போட்டு பின்பு அதை சிறிது ரவை வேகும் வரை சூடாக்கினால் போதும் .
கடைசியாக பாயாசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும் அதில் ஏலக்காய் மற்றும் வறுத்த முந்திரியை போட்டதும் சுட சுட ரவை பாயசம் தயார் .