ஆஸ்கார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி—சிறப்பு செய்தி..

ரெட்ஹில்ஸ், சென்னை:
கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட ஆஸ்கார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி மிகுந்த சிறப்புடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.யோகா, மூளைத் திறன் மேம்பாட்டு யோகா (பிரெயின் யோகா), வீணை, கிட்டார், ரூபிக்ஸ் கியூப், ஹூலா ஹூப், பாரம்பரிய நடனம், பக்தி இசை மற்றும் பல்வேறு திறன் சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள் தங்களது தனித்துவமான ஆற்றல்களை வெளிப்படுத்தினர். குறிப்பாக கண்கட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.இந்நிகழ்வை கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர் நிறுவனரும், பல்துறை திறமைகள் கொண்ட பயிற்சியாளருமான திருமதி சுமதி சிறப்பாக ஒருங்கிணைத்தார். தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனை, வீணைக் கலைஞர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தஆளுமையானஅவர்,குழந்தைகளின் உடல் நலம், மனநலம், கவன ஒருமுகப்படுத்தும் திறன், படைப்பாற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சியைமேம்படுத்தும்நோக்கில்தொடர்ந்துபல்வேறுபயிற்சிகளைவழங்கிவருகிறார்.நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆஸ்கார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் மேடையில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டது மிகவும் பெருமைமிக்க மற்றும் உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.மேலும், கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர் தனது இரண்டாவது உலக சாதனை வெற்றியை வெற்றிகரமாக நிறைவு செய்ததையும் இந்நிகழ்வின் மூலம் கொண்டாடியது. இந்த மாபெரும் வெற்றிக்கு துணைநின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.“ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது” என்ற உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் பணியில் கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.சிறப்பு அம்சங்கள்:
🏆 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு
🏆 100-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டது
🏆 இரண்டாவது உலக சாதனை வெற்றி
🏆 குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு
கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர்
📞 9790201370 | 9952932998 | 9360310870 | 9840520653
“சாதனை என்பது முடிவல்ல… இன்னும் பல சாதனைகளுக்கான தொடக்கம்!” ✨🏆🌟
