
யாங்கோன்:
மியான்மரில் கொரோனா நோய்த்தொற்று புதியதாக 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் புதிதாக நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 9 பேர் யாங்கோன் மற்றும் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே பகுதி மற்றும் சின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் முதன் முதலில் மார்ச் 23 ஆம் தேதி நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.
வைரஸ் கண்டறியப்பட்ட 25 நாட்களில் இதுவரை நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாரம்பரிய திங்கியான் நீர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு யாரும் தப்லீக் மாநாட்டிற்கு செல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.















