Others
`மயில் கறி கிரேவி’ – தெலங்கானா வனத்துறை வழக்கு பதிவு..?
.png?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress)
பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறதுதெலங்கானா மாநிலத்தின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் யூடியூபரான கோடம் பிரனய் குமார். இவர் உணவு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தொடர்ந்து வீடியோ பதிவிட்டும் போதுமான லைக்ஸ், வீவ்ஸ் கிடைக்கவில்லை என எண்ணி இருக்கிறார். அதனால் வித்தியாசமாக ஏதாவது செய்தால் பார்வையாளர்களை அதிகரிக்கலாம் எனக் கருதி, இந்தியாவின் தேசிய பறவையான ‘மயில் கறி கிரேவி எப்படி செய்வது’ என ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் குழு தங்கலப்பள்ளி கிராமத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அந்த நபரின் வீட்டில் இருந்து கறியை மீட்டு, மாதிரி தடயவியல் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கின்றனர்.இது தொடர்பாக அந்த நபர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் பதிவிட்ட அந்த வீடியோவும் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனகாவல்துறை உறுதியளித்திருக்கிறது. எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.