போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்….

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்குப் பணம், செல்போன் உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் தொழில் அதிபர் வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர்மகேந்திரசிம்கனும்சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணி புரிந்த கணேசன் என்பவரைச் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையின் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை குறி வைத்து வீரமணி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான்வீரமணியின்பாலியல்அத்துமீறல்கள் தொடர்பாக வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே வழக்குப் பதிவு செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்குப் பதிவு செய்தாலும், அதன் பிறகு சுமார் 11 மாதங்கள் இந்த வழக்கில் எந்தமுன்னேற்றமும்இல்லை.வீடியோஆதாரத்துடன் புகார் அளித்தும் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.வீடியோவில் உள்ளவர்கள் யார், பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துவைக்கும்படிபோக்சோநீதிமன்றத்தை சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் அணுகியுள்ளனர். ஆனால், போலீஸார் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்தக் காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்ற நீதிபதி மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பிறகுதான் வீரமணியின் பாலியல் கொடுமை குறித்த தகவல்கள் விஸ்வரூம் எடுத்தது.இந்தப் பரபரப்பான சூழ் நிலையில், சென்னையில் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு அலுவலங்களில் நேற்று முன்தினமும், சேலத்தில் நேற்றும் தீவிர சோதனநடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான், வீரமணி குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததாகப் போலீஸார் கூறினாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே கடந்த 2024-ல் போலீஸில் புகார் அளித்தேன் என்று காங்கிரஸ்
சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் நிர்வாகி ரஞ்சன் குமார் நேற்றுமுன்தினம் புதுத் தகவலை வெளியிட்டார். இது பரபரப்பைஏற்படுத்தியது.ரஞ்சன்குமார்புகார்தெரிவித்தகாலக்கட்டத்தில்சென்னைகாவல்ஆணையராக கூடுதல் டிஜிபி-யான அருண் இருந்தார். அவருக்குக் கீழ் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையராக என்.கண்ணன் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் புகார்கள் எழுந்ததையடுத்து,இருவரும்காத்திருப்போர்பட்டியலுக்குஉடனடியாகமாற்றப்பட்டுள்ளனர் இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல் உயர் பயிற்சியக கூடுதல் டிஜிபி அருண், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியைக், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபி ராஜிவ் குமார் கூடுதலாகக் கவனிப்பார். இதேபோல், கோயம்புத்தூர் காவல் ஆணையரான ஐ.ஜி.கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூடுதலாகக்கவனிப்பார்.இவ்வாறுஉள்துறைசெயலர்மணிவாசன்தெரிவித்துள்ளார்.ஜெம்வீரமணிமீதுபுகார்வந்தபிறகு,அந்தவழக்கைச்சரியாகக்கையாளவில்லைஎன்றகுற்றச்சாட்டின் கீழ் இவர்கள்இருவரும்காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை கோயம்பேடு காவல் சரக உதவி ஆணையர் யாஸ்மினையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறதுசென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள்தொடர்பானஒருமுக்கியவழக்கை(வீரமணி)சென்னைகாவல்துறைவிசாரித்துவருகிறது.இதில்,சிறுமிஒருவரின்புகைப்படம்அல்லதுகாணொளிஊடகங்கள்மற்றும்சமூகவலைதளங்களில்பகிரப்பட்டிருப்பதுகண்டறியப்பட்டுள்ளது.சிறுமிஒருவரின்இத்தகையபுகைப்படங்களைப் பகிர்வது குற்றம். அத்தகையபுகைப்படங்களைவெளியிடுவது போக்சோ சட்ட பிரிவு 23(2)-ன் கீழ்குற்றமாகக்கருதப்படுகிறது.எனவே,இதுதொடர்பானதகவல்களைப்பொதுவெளியில்பகிரவேண்டாம்என்றுஅறிவுறுத்தப்படுகிறது.இவ்வழக்குதொடர்பானஆதாரங்கள்ஏதேனும்இருப்பின்,அவற்றைபெருநகரசென்னைகாவல்துறையிடம்சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறுகாவல்ஆணையர்செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார்.ஜெம் வீரமணி வழக்கில் மிரட்டல் கும்பலுடன் போலீஸார் கைகோத்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கடந்த 2025 அக்டோபரில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகியோர் துறை ரீதியான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.