மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை — சிறப்பு செய்தி
*💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின்,சார்பாக பள்ளி மாணவிக்கு நோட்டு, பேனா வழங்கல்**நிறுவன தலைவர் துவக்கி வைத்தார்*நாகப்பட்டினம் ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் வசித்து வரும் சதக்கத்துல்லா என்பவருது மகள் S.பெளமீனா பத்தாம் வகுப்பில் 453 மதிப்பெண்கள் பெற்று, தற்போது 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.குமரன் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மேற்கண்ட S.பெளமீனா மாணவிக்கு 18 நோட்டுகள், 2 பேனா மற்றும் பென்சில்களை நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில்,
திருமதி A.அமுதா ஆனந்தன் அவர்கள் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I.கண்ணுவாப்பா அவர்கள் செய்திருந்தார்.படிக்க வசதியில்லா மாணவ – மாணவியருக்கு இந்தாண்டு நோட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சியினை நாகப்பட்டினத்தில் இன்று நிறுவனர் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக இயங்கி வரும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலமாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியருக்கு நோட்டுகள் வழங்கப்பட இருக்கிறது.இந்நிகழ்வில், விவசாய சேவை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.K.V.செல்வராஜ்,தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஓம் முருகா திரு.S.ஆனந்தன் மற்றும் கோர்ட் திரு.P.சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செய்திகளுக்காக சுரேஷ்