fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியாஉலகம்

கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?

India overtakes china in corona dead

டெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா.

சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் அமெரிக்கா நிலைகுலைந்து போய் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.6 லட்சத்தைத் கடந்துவிட்டது. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 9வது இடத்தில் இருக்கிறது.

இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை  இந்தியா முந்திவிட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறி உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1,65,386 பேருக்கு கொரோனா உள்ளது. ஆனால் சீனாவில் 84,106 பேருக்கு கொரோனா இருந்தது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. சீனாவில் இறப்புகள் 4,638 ஆக இருந்த நிலையில், இந்தியா 4,711 இறப்புகளுடன் சீனாவை மிஞ்சி விட்டது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close