fbpx
Others

கோபி–மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடிப்பு.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மகாமாரியம்மன் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம்வரைநான்குவழிச்சாலைவிரிவாக்கபணிகள்கடந்தசிலஆண்டுகளுக்குமுன்தொடங்கப்பட்டது.கரட்டடிபாளையத்தில் மகாமாரியம்மன் கோயிலை இடித்து அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சுவர் இடிக்கும் இயந்திரம் மூலமாக கோயில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.கோயில் இடிக்கப்பட்டதை தொடர்ந்து கோபி சத்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் ஒரு வழியாகவே அனுமதிக்கப்பட்டது. மாவட்ட நிருபர் SKTசுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close