Others
நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் மன்றம் துவக்க விழா…சிறப்பு செய்தி

நீடாமங்கலம் ஜூன் 17
நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமை வகித்து பேசுகையில் சுற்றுச்சூழல் அவசியத்தைப் பற்றியும், மாசுபாட்டால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றியும், மரங்கள் வளர்ப்பின் அவசியம் இப்போது மிக தேவையானது என்றும் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் கூறினார். நெகிழி இல்லா உலகம் படைப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் என்று கூறி நெகிழி பையின் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார். முன்னதாக சுற்றுச்சூழல் பொறுப்பாசிரியர் திராவிடமணி வரவேற்றார். ஆசிரியை சிங்கார கஸ்தூரிபாய் நன்றி கூறினார்.