Others
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது…..
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச்சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ளஇருப்பதாகஎதிர்பார்க்கப்படுகிறது.அஜித்பவாரின்மனைவிசுனேத்ராமாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்றுபொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது..