fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை:05/04/2025 அன்று  11 வருடமாக நிலுவையில் இருந்த கஞ்சா வழக்கில் பிடிக்கட்டளை நிறைவேற்றிய சிப்காட் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்   சிப்காட் காவல் நிலைய கஞ்சா வழக்கின் எதிரி பால்மணி (வ/54) த/பெ பூச்சி தேவன், எண்:20 எம்.ஜி.ஆர் நகர், வாலாஜா என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு 30 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் பிடிக்கட்டளை பிறப்பிக்கப்பட்டு நெடுங்காலமாக நிலுவையில் இருந்த நிலையில் சிப்காட் போலீசார் கடந்த 02/04/2025 தேதி எதிரி பால் மணியை கைது செய்து சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இன்று நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பிடி கட்டளையை நிறைவேற்றியதற்காக உதவி ஆய்வாளர் . பாஸ்கரன் மற்றும் தலைமைக் காவலர் .லோகேஷ், முதல் நிலை காவலர்கள் ராஜசேகர், சிலம்பரசன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விவேகானந்த சுக்லா அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close