உதயநிதி-எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. இதனிடையே, காசாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.காசா மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு பிரச்னைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது. காசாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முன்வர வேண்டிய நேரம் இது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.