fbpx
Others

நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி…தீர்ப்பின் ஒரு துளி…!

நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் நான் பிறந்தேன். இப்போதுள்ள வசதிகள் போல் 1970-களில் இல்லை. பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு என் தந்தை தினமும் என்னை சைக்கிளில் அழைத்து சென்றுவிடுவார். புதுச்சேரி சட்டக்கல்லூரியில் படித்து, வக்கீலாக பதிவு செய்து, சென்னை ஐகோர்ட்டுக்குள் நுழைந்தபோது எனக்கு யாரும் தெரியாது. 28 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி தற்போதுநீதிபதியாகபதவிஏற்றுள்ளதுமகிழ்ச்சிதருகிறது”என்றார்”  ஈரோடு மாவட்டம், புதுார் அ.கிராமத்தில் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய மனுவை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியை சேர்ந்த தீரன்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு விபரம்:
ஈரோடு மாவட்டம், புதுார் அ.கிராமம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர், அப்பகுதியில் செல்லும் கொப்பு வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து, வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார்.அதே வழியில் செல்லும் நஞ்சை ஊத்துக்குளி பாசன வாய்க்கால் ஜீப் சாலையையும் முழுதுமாக தடுத்து, கம்பி வேலி கொண்டு அடைத்துள்ளார்.வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால், பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ‘ஜீப்’ சாலை ஆக்கிரமிப்பால், விவசாயிகள் வேளாண் கருவிகளை எடுத்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இக்கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை சார்ந்துள்ளனர்.ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஈரோடு மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மனு அளித்துள்ளேன். புகாரின்படி, பொது பணித்துறையின் நீர் வள ஆதார துறை, மாவட்ட தாசில்தாருக்கு அனுப்பிய கடிதத்தில்,’சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து, ஆக்கிரமிப்பை அகற்றும்படி’ உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அளித்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துகுமார், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமார் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களுக்கு பின்,’மனுதாரரின் மனுவை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close