தமிழ்நாடு காவல்துறை பெண்களின் பாதுகாப்புக்காக காவல் உதவி செயலி உருவாக்கம்..
பெண்களின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அலைப்பேசியில் எப்படி டவுன்லோடு செய்வது, இந்த செயலி மூலம் மாணவிகள், பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து செங்குன்றம் பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர்நடத்தினர். செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர். ராஜா ராபர்ட், செங்குன்றம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர். ஜி.புருஷோத்தமன், குற்றபிரிவு ஆய்வாளர். லதா மகேஸ்வரி, போக்குவரத்து ஆய்வாளர். சோபிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி மாணவிகள், பெண்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோரிடம் காவல் உதவி செயலி குறித்த துண்டு பிரசுரம் மூலமும், பெரிய அளவிலான டிவியில் இந்த செயலியை எவ்வாறு டவுன்லோடு செய்வது, பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பேருந்து பயணிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை காவல் துணை ஆணையர்மருத்துவர்கே.எஸ்.பாலகிருஷ்ணன்உள்ளிட்டகாவல்துறையினர்வழங்கினர். அப்போது செல்போன்களில் பிளே ஸ்டோர் மூலம் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யும் முறை, எப்படி உபயோகிப்பது, அவசர உதவிக்கு பயன்படுத்தும் முறை, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவைகுறித்துவிளக்கம்அளிக்கப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், ஆன்டிலின் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.