சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செங்குன்றம், மார்ச் 03: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23 வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பல ஆண்டாகளாகசெயல்பட்டு வந்தது.இந்த பள்ளியை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர குழுமத்தின் சார்பில் ரூபாய் 12.39 கோடி மதிப்பீட்டில் தரை தளம் உள்ளிட்ட மூன்று மாடி கட்டிடம், சத்துணவு கூடம் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் தலைமை ஆசிரியர் . ஆசிரியர்கள் அலுவலர்கள் அலுவலகம், கணினி அலுவலகம் ஆகியவற்றிற்கு ஏசி வசதி செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர். மாதவரம் எஸ்.சுதர்சனம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.சென்னை மாநகராட்சி ஆணையர். குமரகுருபரன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர், செயலர். பிரகாஷ், மாதவரம் மண்டல குழு தலைவர். நந்தகோபால், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

