fbpx
Others

கோவை–நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் பொதுமக்கள் குற்றம்சாட்டு…?

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கியமான மெயின் ரோடு பகுதியில் கால்நடைகளின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் இந்த சாலையை பயன்படுத்தும் நேரங்களில் பாதுகாப்பு குறைவு நிலவுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று பள்ளிக்கு சென்று வந்த கொண்டிருந்த ஒரு மாணவியை சாலையில் திரிந்த மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவி அருகிலுள்ளமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகதகவல்வெளியாகியுள்ளது.இந்தசம்பவம்அப்பகுதிமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக வணிகர் சம்மேளனம், வால்பாறை கிளை நிர்வாகிகள் தெரிவித்ததாவது: “நகரின் முக்கிய சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகள் பல நாட்களாகவே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இன்றைய சம்பவம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு,” என்றனர்.மேலும், உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து பாதுகாப்பான இடங்களில் வைக்கவும், உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாளை காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோவை மாவட்ட புகைபடகலைஞர் ஜெயப்பிரகாஷ் D

Related Articles

Back to top button
Close
Close