நீடாமங்கலம்–இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி 107வது ஆண்டு விழா….சிறப்பு செய்தி
*நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி 107வது ஆண்டு விழா*
நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியின் 107வது ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி தலைமையிலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா பள்ளி முகவர் பழனிவேலு, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் ராஜலெட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது.பள்ளியின் இணை செயலாளர் ஜெகதீஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தேவிலட்சுமி 107 ஆண்டு பழமை வரலாறு நிறைந்த பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.விழாவில் இப்பள்ளி அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவில் வினாடி வினா போட்டிகளில் மாணவர்கள் திறம்பட செயல்பட்டதையும், மாநில அளவில் இந்த ஆண்டு குழந்தைகள் விஞ்ஞானி விருது பெற்றதையும் , பள்ளி மாணவர்கள் அறிவியல் செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர் என்றும், மாநில எழுத்தறிவு விருது பெறகாரணமாக இருந்த பள்ளியின் ஆசிரியர்களை பாராட்டிவட்டாரக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மாநில செயலாளர் எம் எஸ் ஸ்டீபன்நாதன் கலந்து கொண்டு பெற்றோர்கள் மற்றும் மாணவியருடன் கலகலப்புடன் நகைச்சுவையாக மாணவர்களை எப்பாதையில் நாம் கொண்டு செல்ல வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.மேலும் சமூக ஆர்வலர் புரவலர் ஷாஜகான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சந்தான ராமன், பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பத்ம ஸ்ரீ ராமன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜேந்திரன், வணிகர் சங்க துணைத்தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாணவர் பாபு மனோகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டசெயலாளர் சங்கரலிங்கம் மாவட்ட இணை செயலாளர் பிளாட்டோ, கராத்தே பயிற்றுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் , சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழாவும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பான பணியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.விழாவில் நிறைவாக பள்ளியின் ஆசிரியை சிங்கார கஸ்தூரிபாய் நன்றியுரை கூறினார்



