fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

ஆதாரையும், ரேஷனையும் இணைக்கவில்லையா…? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…!

Date extended Aaadhaar, ration card link

டெல்லி: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைக்கும் காலக் கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகளை இணைக்கும் காலக்கெடு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

பொது விநியோக திட்ட முறையில் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாது. ஆதார் கார்டு இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் பெயர்களில் நீக்கம் செய்யப்படாது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் ரேஷன் திட்ட பயனாளிகள் யாருக்கும் உணவு தானியங்களை வழங்க முடியாது என்று கூறக்கூடாது.

அவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளிலிருந்தும் நீக்க கூடாது. 23.5 கோடி ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களில், 90 சதவீதம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது.

80 கோடி பயனாளிகளில் 85 சதவீதம் பேர், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். ஆதார், ரேஷன் இணைப்பு முக்கியமானது என்பதோடு அதில் பயனாளிகளின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close