fbpx
Others

தேனி–LMV வாகனங்கள் மூலம் வியாபாரம்..? பொது மக்களுக்கு இடைஞ்சல்….?

தேனி மாவட்டம், தேனியில் மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு நிழற்குடை அருகிலும், கள்ளர் சொசைட்டி முன்பாகவும் சிறிய ரக LMV வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களையும் வைத்து இந்த வாகனங்களில் சிறிய ஒலி பெருக்கிகள் மூலம் அதிக சத்தத்துடனும் தொடர்ச்சியான முறையில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்…. இதனால் பொதுமக்களுக்கு காதுகளில் அலர்ற்ச்சி ஏற்படும் சூழ்நிலை. போதாது குறைக்கு இவற்றின் அருகில் உள்ள வியாபார நிறுவனங்களில் வியாபாரம் செய்வதற்கு இந்த ஒலி பெருக்கிகள் சத்தத்தால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்..பல ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து, ஆயிரக்கணக்கில் வாடகை கொடுத்து இந்த மாதிரி இடைஞ்சல்களை நாம் சந்திக்க வேண்டுமா என்று இந்த பகுதியிலுள்ள வியாபாரிகள் மற்றும் இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் இந்த ஒலி பெருக்கிகள் சத்தத்தால் அல்லல் படும் அவலம்! இவற்றை எல்லாம் மாவட்ட போக்குவரத்து காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது எதற்காக?…. ஆகையால் இது போன்ற செயல்களை செய்யும் சிறு வாகனங்கள் மூலம் விற்பனை செய்து வருபவர்களுக்கு ஒரு வரன்முறைகளை   ஏற்படுத்தி இது போன்ற செயல்களை தடுக்கும் பொருட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்பொது மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்? மாவட்ட நிர்வாகம், மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்?………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்திமாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close