ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு..?
யார் இவர்? காலியான
பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தான் ஒடிசாவின் முதல் முதல்வராக இன்று மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் மோகன் சரண் மாஜியின் பின்னணி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. வந்தே பாரத் ரயிலையும் விட்டுவைக்கல.. முன்பதிவு பெட்டியை மொத்தமாக ஆக்கிரமித்த மக்கள்.. திணறிய பயணிகள் நவீன் பட்நாயக்.. ஒடிசாவின் அசைக்க முடியாத அரசியல் கட்சி தலைவராக இருந்தவர். பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஒடிசாவின் முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் லோக்சபா தேர்தலுடன் ஒடிசாவுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் ஒடிசாவில் மும்முனை போட்டி நிலவியது. ஆளும் பிஜு ஜனதாதளம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஒடிசாவை பொறுத்தமட்டில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு க
ட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு.. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு நடந்த முடிந்தசட்டசபைதேர்தலில்பாஜகதனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 78 இடங்களை கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாததளம் 51 இடங்களில் ஜெயித்தது.காங்கிரஸ்14தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது. இதில் 2 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 80 ஆக அதிகரித்தது.மேலும் ஒடிசாவில் இதுவரை காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் கட்சிகள் தான் ஆட்சி செய்துள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியில் அதிகாரத்தை அனுபவித்து உள்ளதே தவிர ஒருமுறை கூட தனித்து ஆட்சியமைக்கவில்லை. இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மூலம் பாஜக தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. அதோடு 24 ஆண்டு பிஜு ஜனதாதளம் க
ட்சியில் முதல்வராக செயல்பட்ட நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சட்டசபைத் தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் பங்கேற்றனர். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆர்எஸ்எஸ் நிர்வாகி டூ ஒடிசா முதலமைச்சர்! யார் இந்த மோகன் மாஜி? அரசியல் பின்னணி இதுதான்.! ஒடிசாவை பொறுத்தமட்டில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். இதனால் மோகன் சரண் மாஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல அம்மாநில துணை முதல்வர்களாக கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மோகன் சரண் மாஜி இன்று மாலை ஒடிசா மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். அதன்பிறகு அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழா மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒடிசாவை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் சரண் மாஜிக்கு வயது 53. பழங்குடியினத்தை சேர்ந்தவர் இவர் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி உள்ளார். இந்த தொகுதியில் அவர் 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர் பள்ளி காலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இளமை பருவத்தில் ஆர்எஸ்எஸ்-ன் பல முக்கிய துணை அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். அதோடு ஒடிசாவில் பாஜக – பிஜு ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் தலைமை கொறடாவாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதேபோல் துணை முதல்வராக தேர்வாகி உள்ள கேவி சிங் தியோ 6வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். பாட்னா அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பாஜக – பிஜு ஜனதாதளம் ஆட்சியில் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். மேலும் இன்னொரு துணை முதல்வராக தேர்வாகி உள்ள பிரவதி பரிதா முதல் முறையாக எம்எலவாக தேர்வாகி உள்ளார். இவர் பாஜகவின் மகளிரணி தலைவரியாக 2016 முதல் 2022 வரை செயல்பட்டார். அதன்பிறகு பாஜக துணை தலைவராக செயல்பட்ட நிலையில் தற்போது துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.