fbpx
Others

ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..

திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரிகவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் சாலையில் ஆறாக ஓடிய பால்     ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் பண்ணைக்கு கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டை யில் இருந்து பால் லோடு ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரி வெங்கடாசலம் என்பவர் ஒட்டிசென்றுள்ளார். இன்று காலை திம்பம் மலைப்பாதை 1வது கொண்டை ஊசி வளைவில் சென்ற கொண்டிருந்த லாரி வளைவில் திருப்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் டேங்கர் லாரியில் இருந்து பால் கீழே கொட்டி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திப்பம்பாளை பதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

 

Related Articles

Back to top button
Close
Close