அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது…?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதற்கிடையே இன்று திடீரென செங்கோட்டையன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்..ஜெயலலிதா மறைவுக்கு பிறகே அதிமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி குழப்பங்கள் நிலவி வந்தது. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கும் அளவுக்குக் கூட நிலைமை சென்றது. எல்லாம் முடிந்து கடந்த சில ஆண்டுகளாகத் தான் அங்கு உட்கட்சிப் பூசல் எதுவும் இல்லாமல் இருந்தது.இந்தச் சூழலில் தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அப்போது தான் திமுகவை வீழ்த்த முடியும் என செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். இதுபோல கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இருப்பினும், செங்கோட்டையனுக்கு ஆதரவாக 500+ நிர்வாகிகள் தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இப்படி அதிமுகவில் மீண்டும் ஒருகுழப்பமானசூழல்ஏற்பட்டுள்ளது.இதற்கிடையேஅதிமுகமூத்ததலைவர்செங்கோட்டையன் டெல்லி பயணம் செய்துள்ளார். இன்று காலை அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் செங்கோட்டையன் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.”அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் செங்கோட்டையன் கூறி வந்தார். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று தான் அவர் அப்படி பேசினார். ஆனால், அவர் மீதான அந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். இந்த சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள்.எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நினைத்தவர்களை நீக்கியது இல்லை. அதிமுக கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றியது எம்ஜிஆர்… அதிமுகவை மக்கள் இயக்கமாக மாற்றியது ஜெயலலிதா…” இவ்வாறு அவர் கூறினார்.