சோனியா காந்தி நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகளுக்கு இன்று விருந்தளிக்கிறார்

நாடு முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி இன்று விருந்தளிக்கிறார்.

டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட17 எதிர் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மோடி அரசில் இருந்து விலகிய தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய ஜனதா சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திமுக சார்பில் கனிமொழி, கம்யூனிஸ்ட்கள் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த விருந்து நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.