சென்னையில் மழைக்கு வாய்ப்பு ;சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது , “ அரபிக் கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இருப்பினும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று  தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாகவே சென்னையில் வெயில்  அதிகமாகத்தான் இருக்கிறது. இரவு நேரங்களில் புழுக்கமும் அதிகம் இருப்பதால் மக்கள் கோடை காலத்தை முன்னதாகவே உணரத் தொடங்கினர். இந்நிலையில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.