தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம் துவங்கியது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம்  தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது

தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்து 14 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் ஆண்டுதோறும் இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் முதல்தவணை முகாம் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இரண்டாம் தவணை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கியது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதுதவிர, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் 1,652 சிறப்பு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . மலைப்பிரதேசம், எளிதில் செல்ல முடியாத பகுதிகள் மற்றும் தொலை தூரத்தில் வசிப்போருக்கு வழங்குவதற்காக 1,000 நடமாடும் குழுக்கள் செயல்படுகின்றன.