பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

வாஷிங்டன்: பிரபல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள்  இருப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 9 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

அக்குவா, அக்குவஃபீனா, பிஸ்லரி ஆகிய  நிறுவன வாட்டர் பாட்டில்களில் நடத்திய ஆய்வில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு தகவல் அளித்துள்ளது.

நம்பிக்கையுடன் வாங்கி குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் கேன்சரை உண்டாகும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.