கவுரி லங்கேஷ் கொலை ; இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டான் !

பெங்களூரு: கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளான்.

கர்நாடகாவில் வார பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர் கவுரி லங்கேஷ்,55 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, முதல்வர், சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கொலையாளிகள் தேடப்பட்டுவந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தினர்.

அதில் அவனது பெயர் நவீன்குமார் என்பதும் இந்து யுவ சேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவன் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதன் மூலம் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.