முத்தரப்பு t20 போட்டியில் இந்தியா வெற்றி!!;புள்ளி பட்டியலில் முதலிடம்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான
இந்த போட்டியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில்  டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. மேலும் மழை குறுக்கிட்டதால் 19 ஓவர் போட்டியாகவும் மாற்றப்பட்டது,

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய தாகுர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் . இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா தற்போது 4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேசம் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.