இஸ்லாத்தை தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது!: ஹாதியா மகிழ்ச்சி!

கோழிக்கோடு:

இஸ்லாத்தை  தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது என்று ஹாதியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஹாதியா, ஷஃபீன் ஜஹான் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் முதன் முறையாக ஹாதியா தனது கணவருடன் இன்று கேரளா வந்தார். அங்கு இந்திய பாபுலர் முன்னணி அலுவலகத்தில் வைத்து ஹாதியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“உச்சநீதிமன்றம் எங்களது திருமணத்தை ஏற்றுள்ளது. இப்போது எங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம். இஸ்லாத்தை  தழுவியதால் சுதந்திரம் கிடைத்துள்ளது அரசியலமைப்பு ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உரிமையை எனக்கு அளித்துள்ளது. இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும்”  என்று ஹாதியா தெரிவித்தார்.

24 வயது அகிலா அசோகன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ஹாதியா என வைத்துக் கொண்டார். பின்னர் ஷஃபீன் ஜஹான் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார்.

அவரது தந்தை, தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததோடு தீவிரவாத அமைப்புடன் இணைக்க சதி செய்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

கேரளாவில் 3 நாட்கள் தங்கும் ஹாதியா பின்னர் சேலத்தில் தன்னுடைய படிப்பை தொடர்வதற்காக திரும்ப இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .