கூகுள் தனது அட்சென்ஸ் சேவையை தமிழில் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் தனது விளம்பர சேவையை தமிழ் மொழிக்கும் நீட்டித்திருந்த நிலையில் நேற்று Google for தமிழ் என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியுள்ளது.

இணைய உலகின் ஜாம்பவனான கூகுள் நிறுவனம் கடந்த 2003 ஆம் ஆண்டு Google adsense சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இணையதள உரிமையாளர்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாயை பெற்றுத் தரும் வசதியை கூகுள் உருவாக்கித் தந்தது. ஆனால் இந்த வசதி நீண்டகாலமாக தமிழ் மொழிக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் தனது விளம்பர சேவையை தமிழ் மொழிக்கும் நீட்டித்தது.

இதன்மூலம்  தமிழ் இணையதளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை இணையதள உரிமையாளர்களுக்கு கூகுள் வழங்குகிறது.

இந்நிலையில் நேற்று Google for தமிழ் என்ற நிகழ்ச்சியை சென்னையில் கூகுள் நடத்தியுள்ளது. இதில் இணைய வடிவமைப்பாளர்கள், இணையத்தில் அதிகம் எழுதுபவர்கள், இணையத்தை நடத்துபவர்கள் என பலர் பங்கேற்றிருக்கின்றனர். இது தமிழ் இணையதள உரிமையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூகுள் நிறுவனம் இதுபோன்று பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் இணைய வடிவமைப்பாளர்கள் வரவேற்றுள்ளனர் .