தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார்வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .