வாடிக்கையாளர் பணத்தை திருடி ஏப்பம் விட்ட ஏர்டெலுக்கு ரூ.5 கோடி அபராதம்!!!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையினை முறைகேடாக பயன்படுத்தி கோடி கணக்கில் பேமெண்ட் வங்கி கணக்குகளில் ரூ.167 கோடி பணத்தை வரவாக வைத்துள்ளது என்பது கடந்த ஆண்டு டிசம்பர் தெரியவந்தது.

இவை அனைத்தும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி செய்யப்பட்டதால் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி விசாரணை மேற்கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.