சென்னையில் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது!

சென்னையில் தனது வாழ்க்கையை சீரழித்த தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணிடம் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றிய இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் சென்னை நெசப்பாக்கத்தில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திகேயன் மஞ்சுளா தம்பதியின் 10 வயது மகனை அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கொலை செய்தார்.

இது தொடர்பாக நாகராஜ் கைது செய்யப்பட்டார். மஞ்சுளா உடனான தொடர்பை அவரது கணவர் கார்த்திகேயனிடம் அவரது மகன் தெரிந்த நிலையில் கார்த்திகேயன் நாகராஜை கண்டித்ததால் அவரது மகனை கொன்றதாக நாகராஜ் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து மஞ்சுளாவை கார்த்திகேயன் கைவிட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார்.

சில நாட்களில் நாகராஜ் ஜாமினில் வெளியே வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வாழ்க்கையை கெடுத்த நாகராஜை மஞ்சுளா கொல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக கள்ளத்துப்பாக்கி வாங்க எண்ணிய மஞ்சுளா சைதாப்பேட்டை சேர்ந்த பிரசாத்,சுரேஷ் ஆகிய இருவரிடமும் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்.

அனால் அவர்கள் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றியதாக மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்த நிலையில் மூவரையும் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close