டெலிபோன் பேசியபடியே அசால்ட்டாக பைக் ஓட்டிய வாலிபர் மூளைச்சாவடைந்த பரிதாபம்.

The telephonic spoken of bike guy who suffered the brain death

இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்ட படியே  வண்டியை திருப்பியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டுதல், டிராபிக் ரூல்ஸை மதிக்காமல் வண்டியை ஓட்டுதல் ஆகிய காரணங்ளால் சாலை விபத்துகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசும் எவ்வளவு தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலர் இதனை பின்பற்றுவதில்லை.

இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தலையில் ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசிக்கொண்டே தவறான பாதையில் செலுத்தியதால் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி நிலை குலைந்து போனார்.

காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடம்பில் வேறு எங்குமே காயம் ஏற்படாத நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவரது நெஞ்சை உலுக்கும்  வைக்கும் விதமாக உள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close