fbpx
RETamil NewsTrending Now

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : சதவிகித அடிப்படையில்!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள்,

http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
www.dge2
ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது .

இதில் மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

மொத்த தேர்ச்சி சதவீதங்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு விவரங்கள் வருமாறு;

மொத்தம் 5,456 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இவற்றின் சதவீத விவரம் பின்வருமாறு:

  1. சிவகங்கை மாவட்டம்: 98.5 சதவீதத்துடன் முதலிடம்
  2. ஈரோடு மாவட்டம்: 98.38 சதவீதத்துடன் இரண்டாமிடம்
  3. விருதுநகர் மாவட்டம்: 98.26 சதவீதத்துடன் மூன்றாமிடம்
  4. கன்னியாகுமரி: 98.07 சதவீதத்துடன் நான்காமிடம்
  5. ராமநாதபுரம்: 97.94 சதவீதத்துடன் ஐந்தாமிடம்

மொத்த மாணவ, மாணவியர்கள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு :

  1. மொழிப்பாடம் 96.42
  2. ஆங்கிலம் 96.50
  3. கணிதம் 96.18
  4. அறிவியல் 98.47
  5. சமூக அறிவியல் 96.75
  6. சமூக அறிவியல் 96.75

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதங்களின் சதவீதம் வருமாறு :

  1. அரசுப் பள்ளிகள்: 91.36 சதவீதம்
  2. அரசு உதவி பெறும் பள்ளிகள்: 94.36 சதவீதம்
  3. மெட்ரிக் பள்ளிகள்: 98.79 சதவீதம்
  4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்: 94.81 சதவீதம்
  5. பெண்கள் பள்ளிகள்: 96.27 சதவீதம்
  6. ஆண்கள் பள்ளிகள்: 87.54 சதவீதம்

வெற்றிப்பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் அரசு செய்தி சார்பில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close