fbpx
RETamil Newsதமிழ்நாடு

கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின் போது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி

கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் வியாழனன்று என்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியாளர் ஆறுமுகம் கல்லூரியின் 3வது மாடியின் விளிம்பில் நின்றுகொண்டு கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு கீழே மாணவர்கள் பிடித்து இருந்த வலையில் குதித்தனர். அவர்களைத் தொடர்ந்து பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார்.

லோகேஸ்வரி தன் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தயாராகும் முன் பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவால் தள்ளிவிட்டார் ஆனால் குதிக்கத் தயாராகாத லோகேஸ்வரி மூன்றாம் மாடியிலிருந்து இரண்டாம் மாடியில் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.

விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்திலும் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி முதலில் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆலாந்துறை போலீசார் பயிற்சியாளர் ஆறுமுகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லோகேஸ்வரியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது அங்கு சக மாணவர்களும் லோகேஸ்வரியின் உறவினர்களும் திரண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close