நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Nirmala devi case should be resolved within 6 months - Order by madurai high court

காமக்கொடுமுகி பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் பல கட்ட விசாரணை நடத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்ச்சி மாணவர் முருகன் மற்றும் பேராசிரியர் கருப்பசாமி கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இதை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close