நாட்டையும் மக்களைப்பற்றியும் கவலைபடாத மோடி அரசு;செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!

ஸ்ரீரங்கம் :

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது ;

நம் நாட்டில் காது குத்தும் ஆட்சியாளர்கள் தான் உள்ளனர். நாட்டை பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாத மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் தான் உள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிரிக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கருணாநிதி.

கர்நாடக அரசுடன் நட்புறவு வைத்து காவிரி நீரை பெற்று தந்தவர் கருணாநிதி. தற்போது 7 ஆண்டுகள் ஆகியும் காவிரி நீரை பெற முடியவில்லை.

தமிழக மக்களின் ஜீவாதாரத்தை கண்டுகொள்ளாத வகையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். காவிரி நீரை பெற்றுத்தர கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது.

திமுக தலைமையில் மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close