கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க 4வது முறையாக மோடி மறுப்பு!!!!

டில்லி:

பிரதமர் மோடியை சந்திக்க கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அனைத்துக் கட்சிகள் குழு பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டிருந்தது.

ஆனால் அனுமதி மறுத்த பிரதமர் அலுவலகம் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது.

ஆனால் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்க பினராய் விஜயன் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது வரை பிரதமரை சந்திக்க பினராய் விஜயனுக்கு நான்கு  முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close