fbpx
REஉலகம்

இலங்கையில் தமிழ் பெண்களை பாதுகாக்க விடுதலை புலிகள் திரும்ப உருவெடுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் பதவி விலகல்!!!! சிங்கள அரசு நடவடிக்கையா..?

”எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வெளியே கிளம்பி வீட்டுக்கு வர தமிழீழ விடுதலை புலிகள் கை மீண்டும் ஓங்க வேண்டும்” என கருத்து கூறிய இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தற்போது பதவி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அதிபரின் மக்கள் சேவை திட்ட விழாவில் பங்குபெற்ற இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறுகையில்.

தமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த இலங்கை அரசிற்கு நன்றி, இங்கு எல்லோருக்குமே தெரியும் விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்த்தோம் என்று. வட கிழக்கு மாகாணங்களில் பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி தனது வேலைகளை முடித்துக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தடையும் நிலை வேண்டும் என்றால் திரும்பவும் இங்கே விடுதலை புலிகளின் கைகள் ஓங்க வேண்டும். விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். அவரின் இந்த பேச்சு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்களர்கள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மைத்திர பால சிரிசேனாவிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தனக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்க தான் பதவி விலகுவதாக இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.இதேபோல் பிரபாகரன் இருந்த காலத்தில் தமிழ்மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையை கூறுவதால் எங்களை யாரும் பயங்கரவாதிகள் என கூறிவிட முடியாது என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துருந்தார். இந்த கருத்தும் சிங்களர்கள் மத்தியில் பரப்புக்குள்ளாக்கியது.

Related Articles

Back to top button
Close
Close