நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநில போக்குவரத்து ஊழியர்கள் சமய நலத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரின் மனுவில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர்கள் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பேருந்துகளில் நடத்துனர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற மோட்டார் வாகன சட்ட விதிக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நடத்துனர்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது என வரும் 18ம் தேதிக்குள் பதில் அளிக்க போக்குவரத்துச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close