fbpx
RETamil Newsதமிழ்நாடு

தமிழ்நாடு குறித்து அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்

H.Raja wrongly translated the amithsha words regarding tamilnadu said by minister jayakumar

சென்னை: தமிழ்நாடு பற்றி பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் நிறைந்துவிட்டதாக கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் என்று கூறினார். இதை எச்.ராஜா சிறுநீர் பாசனம் என தவறாக மொழிபெயர்த்தது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறியிருப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த அமித்ஷா கூட்டம் நடத்தினார். அதிமுகவும் கட்சியை பலப்படுத்த கூட்டம் நடத்துவது போலத் தான் இதுவும். இதில் தவறொன்றும் இல்லை என கூறினார்.

அமித்ஷா தமிழகத்தைப் பற்றி தவறாக கூறியிருக்க மாட்டார், அவர் நன்றாகத்தான் கூறியிருப்பார். எச்.ராஜா தான் தவறாக மொழிபெயர்த்திருப்பார்,” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைவர் அமித்ஷா மீது எவ்வளவு நம்பிக்கையும் மற்றும் எச். ராஜா மீது எவ்வளவு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close