fbpx
விளையாட்டு

கிரிக்கெட் உலக சாதனை இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்குவிப்பு!!!

நாட்டிங்காம்:
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளில் ஒன்றாக திகழ்வது இங்கிலாந்து அணி. அந்த அணியின் வீரர்களும் வெற்றி பெற விடாது போராடும் குணம் கொண்டவர்கள்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து புதிய உலக சாதனையை படைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை புரிந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3  விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி தானே முறித்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 408 எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் அடித்துள்ளதன் மூலம் இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வியை தழுவியது .
இதனிடையே ஐந்து  போட்டிகள் கொண்ட தொடரை 3.0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

Related Articles

Back to top button
Close
Close