fbpx
RETamil News

சிறுநீர் பாசனத்துக்காக 332 கோடி ஒதுக்கீடு;எச்.ராஜா மொழிபெயர்ப்பு காமெடி!

சென்னை: சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மொழிபெயர்த்தது  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக வினர் வரவேற்றனர்.

அமித்ஷாவை வரவேற்று சென்னையின் பல இடங்களிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.

பின்பு சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் திட்டங்களை பட்டியட்டு வந்தார்.

அமித்ஷா ஆங்கிலத்தில் பேசியதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 332 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறினார்.

சிறுநீர் பாசனம்:

அதனை சொட்டு நீர் பாசனம் என்று கூறாமல் எச் ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நெட்டிசன்ஸ் கையில்
சிக்கிய எச் ராஜா

எச் ராஜா சாதாரணமாக பேசினாலோ அல்லது டிவிட் போட்டாலோ வச்சு செய்யும் நெட்டிசன்கள் இதனை வைத்து மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close